search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா வரிவிதிப்பு"

    அமெரிக்க தொழில்நுட்ப துறையில் சீனர்களை உரிமையாளர்களாக கொண்ட நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. #UStariffs
    வாஷிங்டன் :

    உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு சீனா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சீனர்களை உரிமையாளர்களாக கொண்ட நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை விலைக்கு வாங்குவதில் இருந்து குறைந்தபட்சம் 25 சதவீதத்தையாவது தடுத்து நிறுத்தும் நோக்கில் அமெரிக்க நிதி அமைச்சகம் விதிமுறைகளை வகுத்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்களை உருவாக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என கூறியுள்ள அந்நாளிதழ், மேம்பட்ட அமெரிக்க அறிவுசார் தொழில்நுட்ப பொருட்கள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் திட்டங்களை அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வடிவமைக்கவுள்ளன என தெரிவித்துள்ளது.

    ஆனால், இதுகுறித்த கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை, நிதித்துறை அமைச்சகம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் ஆகியவை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #UStariffs
    அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு இந்தியா சுங்க வரியை அதிகரித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. #Indiaresponse #UStariffs
    புதுடெல்லி:

    உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

    இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    சமீபத்தில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது. 

    இதேபோல், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான சுங்க வரியை அமெரிக்க அரசு சமீபத்தில் உயர்த்தியது. 

    இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் போன்ற பொருட்களுக்கு 60 சதவீதமும், பயறு வகைகளுக்கு 30 சதவீதமும், போரிக் ஆசிட் மீதான வரி 7.5 சதவீதமும், அர்திமீயா எனப்படும் இறால் மீன் வகைகள் மீதான வரி 15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரும்பு, எஃகு பொருட்கள், ஆப்பிள்கள், முத்துகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளனர். #Indiaresponse #UStariffs
    அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. #Chinaresponse #UStariffs
    பீஜிங்:

    உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

    இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது. 

    சர்வதேச அறிவுசார் சொத்துரிமை மீறலான சில தயாரிப்புகளின் மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி தருவோம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு சீனா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. 

    இதுதொடர்பாக சீன செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருள்கள், வாகனங்கள், மீன் உணவுகள் உள்பட 545 பொருள்களுக்கும், வேதியியல் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 114 பொருள்களுக்கும் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 6ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Chinaresponse #UStariffs
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிக்கு தகுந்த பதிலடி தருவோம் என சீன அரசு தெரிவித்துள்ளது. #Chinaresponse #UStariffs
    பீஜிங்:

    உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமீனியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

    இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது. 

    சர்வதேச அறிவுசார் சொத்துரிமை மீறலான சில தயாரிப்புகளின் மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தக்கபடி பதிலடி தருவோம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்தவாறு அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளையும் சீனா முறித்துக் கொள்ள நேரிடும் எனவும் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டெங் ஷுவாங் எச்சரித்துள்ளார்.

    சீனாவின் நன்மைக்கு எதிராக அமெரிக்க அரசு ஒருதலைபட்சமான நடவடிக்கை எடுத்தால், எங்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க தேவையான எதிர் நடவடிக்கைகளை நாங்கள் உடனடியாக எடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Chinaresponse #UStariffs
    ×